"ப்ளீஸ், அந்த பையன இன்னைக்கி ஆட வைங்க.." CSK'வுக்கு ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை.. "ஜடேஜா என்ன முடிவு எடுப்பாரோ??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையைக் கைப்பற்றி, தங்களின் திறனை நிரூபித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை வெற்றிகளை குவிக்க தடுமாறி வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக, சிஎஸ்கேவின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகவே, புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரது தலைமையில், இதுவரை ஆறு போட்டிகள் ஆடி முடித்துள்ள சிஎஸ்கே, அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
வாய்ப்பை தவற விட்ட சிஎஸ்கே..
உத்தப்பா, ஷிவம் துபே, ராயுடு, ருத்துராஜ் என பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை அனைவரும் அளித்து வந்தாலும், சிஎஸ்கேவின் பவுலிங் தான் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. கடைசியாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை சிஎஸ்கே எடுத்திருந்தது. இதனால், சென்னை அணி வெற்றி பெறும் என்றே பலரும் கருதினர். ஆனால், மில்லர் தனியாளாக சிஎஸ்கே பந்து வீச்சை சிதறடித்தார்.
அதிலும் குறிப்பாக, நான்கு ஓவர்கள் முழுமையாக வீசாத ஜோர்டன், விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் 58 ரன்களை வாரி வழங்கி இருந்ததும், சென்னை அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ள சிஎஸ்கே, இனிவரும் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றியினை பதிவு செய்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இத எல்லாம் சீக்கிரம் பண்ணுங்க..
அந்த வகையில், இன்று (21.04.2022) நடைபெறவுள்ள போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் போது, சில மாற்றங்களை சிஎஸ்கே நிச்சயம் செய்தாக வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜோர்டனுக்கு பதிலாக, மற்றொரு வெளிநாட்டு வீரரான ப்ரெட்டோரியஸ்ஸிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் களமிறங்கி இருந்த ப்ரெட்டோரியஸ், 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆனால், அவருக்கு அதன் பின்னர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
ராஜ்வர்தன் இன்னைக்கி ஆடணும்..
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அவர் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதே போல, U 19 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக ஆடி இருந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கரையும், இன்றைய போட்டியில் களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, சென்னை அணிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் ராஜ்வர்தன. பேட்டிங்கில் அதிரடி ஆட்டமும், பவுலிங்கில் 140 கி.மீக்கு மேல் வரை வேகமாகவும் வீசக் கூடிய ராஜ்வர்தன், நிச்சயம் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆட வைக்க வேண்டும் என சிஎஸ்கே அணிக்கு, ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், சிஎஸ்கே அணி எப்படிபட்ட அணியுடன் களமிறங்கவுள்ளது என்பதை டாஸ் போடும் நேரத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும். அணியில் மாற்றங்கள் இருக்குமா என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு.. https://www.behindwoods.com/bgm8/