நல்லா PERFORM பண்ணியும்.. CSK மீது கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்.. அப்படி என்னங்க அவங்க பண்ணாங்க??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணி, மும்பை அணியின் முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தாலும், அவர்கள் செய்த ஒரு விஷயம், ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பக்கம் ஆறு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள சிஎஸ்கே அணியும், மறுபக்கம் ஆடியுள்ள ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் தற்போது நேருக்கு நேர் மோதி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஆடிய மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
மும்பை அணி நிர்ணயித்த இலக்கு
ரோஹித் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் ரன் எடுக்காமல் முகேஷ் சவுத்ரி ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து, சிறிய இடைவெளியில் மும்பை அணியின் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. 20 ஓவர்கள் முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி ஆடி வருகிறது.
கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள்
சிஎஸ்கே அணி சிறப்பாக பந்து வீசி இருந்தாலும், அவர்களின் ஃபீல்டிங்கின் போது நடந்த சில விஷயங்கள், ரசிகர்களின் பொறுமையை அதிகமாக சோதித்துள்ளது. ஆரம்பத்தில், சூர்யகுமார் யாதவின் ஸ்டம்பிங் வாய்ப்பு ஒன்றை தோனி தவற விட்டார். இதன் பிறகு, ப்ரேவிஸ் கேட்சை ஜடேஜா தவற விட்டார். இதன் பிறகு, திலக் வர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை பிராவோ தவற விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட திலக், 51 ரன்கள் எடுத்திருந்தார்.
எவ்ளோ வாய்ப்ப மிஸ் பண்ணாங்க..
இதன் பிறகும், ஜடேஜா, ஷிவம் துபே உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து சில முக்கிய கேட்ச் வாய்ப்பினை விட்டனர். அப்படி கையில் கிடைத்த எல்லா வாய்ப்பையும் சென்னை அணி சரியாக பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் இன்னும் 30 ரன்கள் வரை குறைவாக, மும்பை அணியை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால், சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங்கில் நிகழ்ந்த தவறு, மும்பை அணிக்கு சாதகமாக அமைந்து விட்டது.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டும் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்ற சூழலில், சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கில் செய்து வரும் தவறுகள், தங்களின் அடுத்த வாய்ப்பிற்கு வினையாக அமையலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
