'அவர' மாதிரி இந்த 'ரெண்டு' பேரும் எனக்கு சப்போர்ட் குடுக்கல... கட்டக்கடைசியாக 'ரகசியம்' உடைத்த வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Apr 02, 2020 01:54 AM

1983-ம் ஆண்டுக்குப்பின் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப்பின் தோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்றது. இலங்கைக்கு எதிரான கடைசிப்போட்டியில் தோனி-யுவராஜ் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

Dhoni, Kohli didn\'t support me the way Ganguly did: Yuvraj Singh

அப்போது யுவராஜ் சிங்குக்கு உலகக்கோப்பை தொடர் நாயகன் விருது அளித்தும் கவுரவப்படுத்தப்பட்டது. தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்குப்பின் மீண்டு வந்து இந்திய அணிக்காக விளையாடினார். ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் யுவராஜ் சிங் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வு குறித்து தற்போது மனந்திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியொன்றில், '' கங்குலி தலைமையில் விளையாடியது மனதில் மிகவும் பசுமையான நினைவுகளாக உள்ளது. அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். ஆனால் தோனி மற்றும் கோலி எனக்கு அவ்வளவு உறுதுணையாக இருந்தது இல்லை. இருவரிடமும் சாதகமும், பாதகமும் நிறைந்துள்ளன,'' என தெரிவித்து இருக்கிறார்.