"அடுத்த சீசனில் இதை நம்பித்தான் இருக்கோம்"... 'CSKவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்?!!'... 'வெளிப்படையாகவே சொன்ன தோனி!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய போட்டிக்குப்பின் அடுத்த சீசன் குறித்து முக்கிய தகவல் ஒன்றை சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரை தொடக்கத்தில் அடுத்தடுத்த தோல்வியோடு தொடங்கினாலும் கூட கடைசியில் சிஎஸ்கே அணி வெற்றிகளை குவித்து வெளியேறியுள்ளது. இதுவரை விளையாடிய 10 ஐபிஎல் சீசன்களில் அனைத்திலும் பிளே ஆப் சென்ற சிஎஸ்கே அணி இந்த வருடம் முதல்முறையாக பிளே ஆப் செல்லாமலேயே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இதையடுத்து நேற்றைய போட்டிக்குப்பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, "இந்த தொடர் எங்களுக்கு மோசமாக இருந்தது. எங்கள் முழு திறமையை நாங்கள் இந்த தொடரில் காட்டவில்லை. இந்த தொடரின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். கடைசி நான்கு போட்டியில்தான் எங்கள் அணி முழுமையான அணியாக உருவெடுத்தது. நீங்கள் மிக மோசமான பின்னடைவை சந்திக்கும்போது அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்.
சில விஷயங்களை மாற்ற முடியாது. ஒரு அணியில் இருக்கும் எல்லோரும் அணிக்காக உழைக்க வேண்டும். இந்த தொடரில் ஆடிய சில வீரர்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அடுத்த சீசனைப் பொறுத்தவரை பிசிசிஐ அமைப்பை நம்பித்தான் இப்போது இருக்கிறோம். அவர்கள் எங்கே ஏலம் நடத்துகிறார்கள், எப்படி ஏலம் நடத்துகிறார்கள் என்பதை பொறுத்தே எதிர்காலம் முடிவு செய்யப்படும்.
எங்கள் அணியின் அடிப்படை அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அடுத்த 10 வருடங்களுக்கு ஏற்றபடி அணியை மாற்ற வேண்டும். ஐபிஎல் தொடக்கத்தில் நாங்கள் உருவாக்கிய அணி சிறப்பாக இருந்தது. அடிப்படை அணியை முறையாக உருவாக்கி அதை வைத்து ஆடினேன். நாங்கள் கொஞ்சம் லேசாக மாற்றம் அடைய வேண்டும். முறையான அணியை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு அணியை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.