சாம் கர்ரனுக்கு பதிலாக விளையாட போறது யார் தெரியுமா..? ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த சிஎஸ்கே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சாம் கர்ரனுக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் (IPL) தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 52 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 9-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. மேலும் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரனுக்கு (Sam Curran) காயம் ஏற்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரில் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ப்ளே ஆஃப் நெருங்கும் சமயத்தில் சாம் கர்ரன் விலகியது சிஎஸ்கே அணி சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சென்னை அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பிராவோ (Bravo), ஓய்வில் உள்ள சமயங்களில் அந்த இடத்தை சாம் கர்ரன் நிரப்பி வந்தார். இந்த சூழலில் சாம் கர்ரன் விலகியுள்ளதால் பிராவோக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. அதனால் சாம் கர்ரனுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் என சிஎஸ்கே அணி தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ் (Dominic Drakes) என்பவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட இவர் விளையாடவில்லை. ஒரே ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டியிலும், 25 முதல் நிலை போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.
இந்த சூழலில் ஐபிஎல் லீக் தனது கடைசி லீக் போட்டியில் இன்று (07.10.2021) பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. இதனை அடுத்து ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் டெல்லியுடன் (DC) சென்னை அணி மோதுகிறது. இதுவரை டெல்லி அணியுடன் மோதிய 2 லீக் போட்டிகளிலும், சிஎஸ்கே தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.