காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்?.. அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்.. "அய்யய்யோ, என்னங்க ஆச்சு??.. எப்போ திரும்ப வருவாரு??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஐபிஎல் சீசனில், நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரில் பெரிய அளவில் தடுமாற்றம் கண்டு வருகிறது.

இதுவரை, 7 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே, இரண்டில் மட்டும் வெற்றி கண்டுள்ளது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றில் முன்னேறுவதற்கான வாய்ப்பும் உருவாகும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
பேட்டிங்கில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், சென்னை அணியின் பவுலிங் தான் நிலையானதாக இல்லாமல் இருக்கிறது.
காயத்தால் அவதிப்படும் வீரர்கள்
ஐபிஎல் ஏலத்தில், 14 கோடி ரூபாய் கொடுத்து தீபக் சாஹரை வாங்கி இருந்தது சிஎஸ்கே. ஆனால், காயம் காரணமாக ஒட்டு மொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார். அதே போல, மற்றொரு பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் காயத்தின் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்து ஒதுங்கியுள்ளார். அவருக்கு பதிலாக, இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவையும் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
அடுத்த வீரருக்கும் 'Injury'?
பவுலிங்கில் நம்பி எடுத்த வீரர்கள், காயம் காரணமாக ஒதுக்கியுள்ளது, சென்னை அணிக்கு பேரிடியாகவே வந்து சேர்ந்துள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது மற்றொரு வீரரும் காயத்தால் அவதிப்பட்டு வருவது, சென்னை அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அணியில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலி, சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே, மொயீனை சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. நடப்பு தொடரில் பெரிய அளவில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், நிச்சயம் அவரது பங்களிப்பு எப்போதாவது கை கொடுக்கும் என்றே ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
எப்போ திரும்ப வருவாரு?
அப்படி ஒரு சூழ்நிலையில், காயம் காரணமாக மொயீன் அலி அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில், மொயீன் அலி இடம்பெறவில்லை. கணுக்கால் பகுதியில் மொயீன் அலிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த சில போட்டிகளில் அவர் களமிறங்காமல் போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகிறது.
தீபக் சாஹர், ஆடம் மில்னேவை தொடர்ந்து மொயீன் அலியும் காயத்தால் சில போட்டிகளில் விலகியுள்ளதாக கூறப்படும் தகவல், சென்னை அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக தற்போது ஆரம்பமான போட்டியில், சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈந்த போட்டியிலும் மொயீன் அலி களமிறங்கவில்லை.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
