“கஸ்டமரோட பாதுகாப்புதான் முக்கியம்”.. அடுத்தடுத்து தீப்பிடிக்கும் ELECTRIC BIKE.. ஓலா நிறுவனம் முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்பிரபல எலெக்ட்ரிக் இருசக்க வாகன நிறுவனமான ஓலா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி வெடித்து சிதறும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அதனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களிடையே ஒருவித அச்சம் நிலவி வருகிறது. இது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அலட்சியம் காட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் வாகனத்தில் குறை இருக்கும் பட்சத்தில் உடனடியாக ரி-கால் செய்து அவற்றை சரி செய்யவும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் பதில் அளித்துள்ளார். அதில், ‘எலெக்ட்ரிக் அல்லது கசோலின் என எந்த வாகனத்தை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் பிரச்சினை ஏற்படுவது சாதாரண விஷயம்தான். அதற்காக பிரச்சினை எதுவும் இல்லை என நான் கூற மாட்டேன். பெரும்பாலான பிரச்சினைகள் மென்பொருள் சார்ந்தது என்பதால் எங்களால் அதை விரைவில் சரி செய்ய முடியும்’ என அவர் தெரிவித்தார்.
மேலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1441 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஓலா நிறுவனம், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கூட்டர்களின் மீது முழுமையான ஆய்வு செய்து, உதிரி பாகங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இருக்கிறோம். அதனால் 1441 வாகனங்களை ரி-கால் செய்ய உள்ளோம்’ என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களில் பாதுகாப்புதான் முக்கியம் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஓகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தங்களது 3000-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8