Oh My Dog
Anantham

"அன்னைக்கி வேட்டி, சட்டை.. இன்னைக்கி கோட் சூட்.." பிரபல 'CSK' வீரரின் திருமண புகைப்படம்.. 'WISH' பண்ணும் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 25, 2022 06:58 PM

நடப்பு ஐபிஎல் தொடரில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

CSK Devon conway wedding pic revealed fans wished

Also Read | உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்.. யம்மாடி இவ்வளவு வயசா?

தொடர்ந்து, தங்களின் 8 ஆவது போட்டியில், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை இன்று (25.04.2022) சந்திக்கவுள்ளது.

இதற்கு முன்பு இரு அணிகளும் மோதி இருந்த லீக் போட்டியில், பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

வெற்றி பெறுமா CSK?

இதனையடுத்து, இரண்டாவது லீக் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதவுள்ளது. முன்னதாக, மும்பை அணிக்கு எதிராக நடைபெற்றிருந்த லீக் போட்டியில், கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் அடித்து, பினிஷிங் பணியை அசத்தலாக செய்திருந்தார் தோனி. அடுத்த சுற்றுக்கு சென்னை அணி முன்னேறவுள்ள வாய்ப்பு, ஓரளவுக்கு கடினமாகவே இருந்தாலும், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும் சிஎஸ்கே உள்ளது.

CSK Devon conway wedding pic revealed fans wished

இந்நிலையில், சிஎஸ்கேவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில், பிராவோ, உத்தப்பா உள்ளிட்ட வீரர்கள் சிலரை மீண்டும் சென்னை அணி எடுத்திருந்தாலும், பல வீரர்கள் புதிதாகவும் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

சென்னை வீரருக்கு திருமணம்..

அந்த வகையில், தொடக்க வீரராக பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை அணியில் இணைந்தவர் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே. நடப்பு ஐபிஎல் தொடரில், ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கி இருந்த கான்வே, 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

CSK Devon conway wedding pic revealed fans wished

அப்படி ஒரு சமயத்தில் தான், கடந்த சில தினங்களுக்கு முன் சிஎஸ்கே சார்பில், டெவான் கான்வேவிற்கு 'Pre Wedding' கொண்டாட்டம் நடைபெற்றிருந்தது. கான்வே வேட்டி சட்டையில் இருக்க, காதலியும் மனைவியுமான கிம் வாட்சன் புடவை அணிந்திருந்தார். அதே போல, சென்னை வீரர்கள் அனைவரும் வேஷ்டி உடுத்திய படி, தமிழ் பராம்பரிய முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது.

CSK Devon conway wedding pic revealed fans wished

வாழ்த்தும் 'CSK' ரசிகர்கள்

இதன் பின்னர், தன்னுடைய திருமணத்திற்கு வேண்டி, கான்வே நியூசிலாந்து செல்லவுள்ளதால், ஒரு வாரம் அவர் சிஎஸ்கேவுடன்  இருக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த வகையில், நியூசிலாந்து சென்றிருந்த கான்வே, காதலி கிம் வாட்சனை கரம் பிடித்துள்ளார். இருவரின் திருமண புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

CSK Devon conway wedding pic revealed fans wished

சிஎஸ்கே ரசிகர்களும், புதிய ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். திருமண நிகழ்ச்சி முடிவடைந்த பின், விரைவில் அவர் சென்னை அணியுடன் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #CSK #DEVON CONWAY #CSK DEVON CONWAY WEDDING PICTURES #ஐபிஎல் #ரவீந்திர ஜடேஜா #சென்னை சூப்பர் கிங்ஸ் #டெவான் கான்வே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSK Devon conway wedding pic revealed fans wished | Sports News.