"தோனி டி 20 'WORLD CUP'ல ஆடுவாரா??.." ஒரே ஒரு ட்வீட் மூலம் பத்திக்கிட்ட இணையம்.. நடந்தா நல்லா தாங்க இருக்கும்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று (21.04.2022) நடைபெற்றிருந்த போட்டியில், தோனியின் பினிஷிங்கை பற்றி, தற்போது வரை ரசிகர்களும், பிரபலங்களும் ஆச்சரியத்தில் பாராட்டி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
![RP Singh wants ms dhoni to play in t20 world cup RP Singh wants ms dhoni to play in t20 world cup](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/rp-singh-wants-ms-dhoni-to-play-in-t20-world-cup.jpg)
மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், அவர்கள் மோதும் போட்டி என்ற போது, ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 156 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணிக்கு நிர்ணயித்தது.
Finish செய்த தோனி
ஓரளவுக்கு எளிய இலக்கு என்றாலும், இரண்டாவது பேட்டிங் செய்த சென்னை அணி, சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. இதனால், எந்த அணி வெற்றி பெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு கடைசி வரை போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தில் ப்ரெடொரியஸ் அவுட்டானார். இதன் பின்னர், பிராவோ வர அவர் ஒரு ரன் எடுத்தார். பிறகு, நான்கு பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட 6, 4, 2, 4 என அடித்து போட்டியை சென்னை பக்கம் திருப்பினார் தோனி. ஒட்டுமொத்த மும்பை வீரர்களும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, Vintage தோனியைக் கண்ட உற்சாகத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டாடினர்.
பிரபலங்கள் கூட மெர்சல் ஆயிட்டாங்க..
சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடி வருகிறார். அதிலும், கடந்த சில சீசன்களில் தோனியின் பேட்டிங், பெரிய அளவில் எடுபடவில்லை. இதனால், அதிக விமர்சனம் அவரை சுற்றி உருவாகி இருந்தது. ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், அரை சதமடித்த தோனி, தற்போது பினிஷர் இடத்திலும் பட்டையைக் கிளப்பி உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
டி 20 உலக கோப்பையில் தோனி?
அதே போல, பிரபலங்கள் பலரும் தோனியின் ஆட்டத்தை பாராட்டி இருந்த நிலையில், இணையம் முழுக்க எங்கு திரும்பினாலும் தோனி என்ற பெயரை தான் அதிகம் பார்க்க முடிந்தது. அந்த வகையில், முன்னாள் இந்திய வீரர் ஒருவர் போட்டுள்ள ட்வீட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஆர் பி சிங், "டி 20 உலக கோப்பைக்கு வேண்டி, ஓய்வில் இருந்து வெளியே வர தோனிக்கு கோரிக்கை வைக்கலாமா?" என தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் கீழ், ரசிகர்கள் பல விதமான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)