"எதுக்கு இவ்ளோ கோபம்?.." நடுவரை திட்டிய ஸ்டியோனிஸ்??.. ஒரே மேட்டர்'ல இப்படி ஆயிடுச்சே 'பாஸ்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 20, 2022 06:31 PM

நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

marcus stoinis warned after his outburst at umpire

Also Read | ‘ரஷ்யா-உக்ரைன் போர்’.. சர்ச்சையை கிளப்பிய Satellite போட்டோ.. Google maps கொடுத்த விளக்கம்..!

பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளும் நேற்று (19.04.2021) நடைபெற்றிருந்த போட்டியில் மோதி இருந்தன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், தனியாளாக போராடிய ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், 96 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.

புள்ளிப் பட்டியலில் முன்னேறிய ஆர்சிபி

இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை பெங்களுர் அணி எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்திருந்தார். 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறி இருந்தது.

marcus stoinis warned after his outburst at umpire

இந்நிலையில், இந்த போட்டிக்கு மத்தியில் நடந்த சம்பவம் ஒன்று, தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசி இரண்டு ஓவர்களில், லக்னோ அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் ஸ்டியோனிஸ் மற்றும் ஹோல்டர் ஆகியோர் இருந்ததால், லக்னோ அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது.

மறுத்த நடுவர், கத்திய ஸ்டியோனிஸ்

தொடர்ந்து, 19 ஆவது ஓவரை ஹேசல்வுட் வீசினர். இதன் முதல் பந்து, வைடாக சென்றது. ஆனால், ஸ்டியோனிஸ் நகர்ந்து விட்டதாக கூறி, நடுவர் வைடு கொடுக்கவில்லை. அடுத்து, இரண்டாவது பந்தை ஹேசல்வுட் வீச வரும் போது, வேண்டுமென்றே வைடு லைன் பக்கம் சென்று நின்றார் ஸ்டியோனிஸ்.

இதனை பயன்படுத்திக் கொண்ட ஹேசல்வுட், சரியாக வீசி ஸ்டியோனிஸை போல்டு ஆக்கினார். இதனால், விரக்தி அடைந்த ஸ்டியோனிஸ், கத்திக் கொண்டே ஆக்ரோஷத்துடன் வெளியேறி சென்றார். அதே போல, கள நடுவரிடமும் அவர் கோபத்துடன் பேசிக் கொண்டே சென்றார். அவரின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை கிளப்பி இருந்தது.

marcus stoinis warned after his outburst at umpire

தொடர்ந்து, ஐபிஎல் விதிகளை மீறி செயல்பட்டதால் பெயரில், ஸ்டியோனிஸிற்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதே போல, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக லக்னோ கேப்டன் கே எல் ராகுலுக்கும் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | “2 வருசமா வேலை கிடைக்கல”.. காலேஜ் வாசலில் டீக்கடை.. பட்டதாரி பெண் எடுத்த துணிச்சல் முடிவு..!

Tags : #CRICKET #IPL 2022 #MARCUS STOINIS #UMPIRE #ஸ்டியோனிஸ் #ஆர்சிபி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Marcus stoinis warned after his outburst at umpire | Sports News.