‘நீ இல்லைங்கிறத நம்பவே முடியல’!.. திடீர் ‘மாரடைப்பால்’ இறந்த தமிழக கிரிக்கெட் வீரர்.. சோகத்தில் அஸ்வின்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சாளர் பிரஷாந்த் ராஜேஷ் (35) நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 2018-ல் நடந்த டிஎன்பிஎல் (TNPL) போட்டியில் கோவை கிங்ஸ் சார்பாக விளையாடியுள்ளார். காரைக்குடி காளை அணிக்கு எதிரான போட்டி ஒன்றின் சூப்பர் ஓவரில் பிரஷாந்த் ராஜேஷ் எடுத்த 3 விக்கெட் கோவை கிங்ஸ்-ன் வெற்றி முக்கிய காரணமாக அமைந்தது. அப்போட்டியில் தற்போது ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடி வரும் தமிழக வீரர் டி.நடராஜ் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவரது மறைவுக்கு தமிழக கிரிக்கெட் வீரரான ரவிசந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், ‘ நீ இல்லை என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. போட்டி முடிந்தபின் நாம் பேசிய உரையாடலை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்’ என அஸ்வின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிரஷாந்த் ராஜேஷ் 19 வயதுகுட்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியின் ப்ளேயின் லெவனில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
RIP M.P Rajesh.. So hard to believe that you are no more. I will never forget the after match conversations we used to have @sanch_cs @raaravind
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) October 5, 2020

மற்ற செய்திகள்
