CSK VS RCB: இன்னைக்காவது அந்த ‘இளம்’ வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ப்ளேயிங் லெவனில் இளம் வீரர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘இனி அவர் விளையாடுறது டவுட் தான்?’.. சோகத்தில் உள்ள CSK ரசிகர்களுக்கு இடியாய் வந்த புது தகவல்..!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இப்படி தோல்வி அடைவது இதுவே முதல்முறை. இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று (12.04.2022) டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அணியில் சில மாற்றங்களை நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். அப்போது அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த சூழலில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் ஒன்றில் கூட ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
வேற டீமுக்கு போனாலும் பழச மறக்காத டு பிளசிஸ்.. சிஎஸ்கே வீரர்களை பார்த்ததும் செய்த செயல்..!

மற்ற செய்திகள்
