"கடவுளின் பரிசு".. அப்பாவான மயங்க் அகர்வால் பகிர்ந்த புகைப்படம்.. விராட் கோலி போட்ட நெகிழ்ச்சி கமெண்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Dec 12, 2022 08:32 PM

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மயங்க் அகர்வால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதனையடுத்து, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Cricketer Mayank Agarwal Shares First Pic of Son Aayansh

Also Read | "பயத்தையும் பிரச்சனைகளையும் இப்படி டீல் பண்ணுங்க".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சூப்பர் வீடியோ.. !

கர்நாடகாவை சேர்ந்த மயங்க் அகர்வால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக இந்தியாவுக்காக ஆடினார். ஒருநாள் போட்டியில் கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 113 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் அகர்வால். இதில் 2331 ரன்களை அவர் எடுத்திருக்கிறார்.

Cricketer Mayank Agarwal Shares First Pic of Son Aayansh

கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மயங்க், அடுத்த ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக ரூ. 1 கோடி அடிப்படை விலையில் மயங்க் அகர்வால் பதிவு செய்யப்பட்டிருக்கிறார். ஐபிஎல் 2023ல் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Cricketer Mayank Agarwal Shares First Pic of Son Aayansh

மயங்க் அகர்வால் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது காதலி ஆஷிதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் கே.எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள் அப்போது வைரலானது. இந்நிலையில், தற்போது இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. கடந்த 8 ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக மயங்க் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

Cricketer Mayank Agarwal Shares First Pic of Son Aayansh

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"எங்கள் இதயம் நிறைந்த நன்றியுடன், நாங்கள் ஆயன்ஷை அறிமுகப்படுத்துகிறோம். ஒளியின் முதல் கதிர், எங்களுடைய ஒரு பகுதி & கடவுளின் பரிசு" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி,"உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நவ்தீப் சைனி, ஜஸ்பிரிட் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன், அஜிங்கியா ரஹானே, க்ருனால் பாண்டியா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | Legend Saravanan : அரசியலுக்கு வருவீங்களா?.. “மக்களும், மகேசனும் முடிவு செய்வார்கள்!”.. லெஜண்ட் சரவணன் பளிச் பதில்.!

Tags : #MAYANK AGARWAL #CRICKETER MAYANK AGARWAL #MAYANK AGARWAL WITH HIS SON #AAYANSH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cricketer Mayank Agarwal Shares First Pic of Son Aayansh | Sports News.