நான் 'பேட்' எடுக்குற நேரத்துல தான் இப்டி நடக்கணுமா??.. ரெடி ஆன 'கோலி'.. அடுத்த கணமே நடந்த சோதனை
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே கோலி பேட்டிங் செய்வதற்காக தயாரான போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது அந்நாட்டிற்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்தது. தொடர்ந்து, இரண்டாவது போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ள நிலையில், தொடரை யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி, நேற்று ஆரம்பமானது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்காத கேப்டன் விராட் கோலி, நேற்றைய போட்டியில் களமிறங்கினார். இதில், டாஸ் வென்ற அவர், இந்திய அணி பேட்டிங் செய்வதாக தெரிவித்தார். அதன்படி ஆடிய இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதனால், 223 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மீண்டும் விமர்சனம்
அதிகபட்சமாக, விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு சர்வதேச சதம் கூட அடிக்காமல் இருக்கும் கோலி, இந்த முறையும் அந்த வாய்ப்பை நழுவ விட்டார்.
அதே போல, சீனியர் வீரர் ரஹானே 9 ரன்களுடன் வெளியேறி, இந்த முறையும் ஏமாற்றி, அதிக விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
தற்செயலாக நடந்த சம்பவம்
இதனிடையே, இந்த போட்டிக்கு மத்தியில், தற்செயலாக நடந்த சம்பவம் ஒன்றின் வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் 12 ரன்களுடன் முதல் ஆளாக, அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ஆடிக் கொண்டிருந்தனர்.
நல்ல டைமிங்
அப்போது, அடுத்ததாக களமிறங்க வேண்டி, விராட் கோலி டிரெஸ்ஸிங் ரூமில், தயாராகிக் கொண்டிருந்தார். பேட்டிங் செய்வது போலவும் சைகை செய்து கொண்டிருந்தார். அவர் அப்படி செய்த இரண்டாவது பந்திலேயே, ரபாடா பந்து வீச்சில், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்செயலாக நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோவைக் கண்ட ரசிகர்கள், இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
— Sunaina Gosh (@Sunainagosh7) January 11, 2022
இதற்கு பிறகு களமிறங்கிய கோலி, புஜாராவுடன் இணைந்து ஓரளவுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
