நான் 'ஒழுங்கா' ஆடிருந்தா... அந்த 'ரெண்டு' பேருக்கும் சான்ஸ் கெடைச்சு இருக்காது!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநான் ஒழுங்காக விளையாடவில்லை அதனால் தான் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்திய அணிக்காக 17 வயதிலேயே கிரிக்கெட் விளையாட வந்தவர் பார்த்திவ் பட்டேல். தோனியால் அணியில் தொடர்ந்து அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அதற்கு தற்போது பார்த்திவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், '' பலரும் நான் தவறான காலத்தில் பிறந்து விட்டேன். இது தோனியின் காலம் என்கிறார்கள். ஆனால் நான் தோனிக்கு முன்பே அணிக்கு வந்து விட்டேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அதனால் தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
முதலில் தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார். அதற்கு அடுத்து தோனி அணியில் இடம் பிடித்தார். நான் சரியாக ஆடியிருந்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்காது. நான் தோனியின் காலத்தில் பிறந்தவன் என்பதால் நீண்ட காலம் ஆட முடியவில்லை என்று கூறி பரிதாபம் தேட மாட்டேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்
