"வயசு '40' தாண்டிடுச்சு... எப்போ தான் 'RETIRED' ஆகப் போறீங்க??..." 'யூனிவர்சல் பாஸ்' சொன்ன அசத்தல் 'பதில்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில், கடந்த 1999 ஆம் ஆண்டு, இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமாகி 22 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
41 வயதாகும் கிறிஸ் கெயில், மைதானத்தில் பறக்க விடும் சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இத்தனை வயதிலும் உலகளவில் நடக்கும் ஐபிஎல் உட்பட பல டி 20 தொடர்களில் சிக்ஸர் வாணவேடிக்கை நடத்தி வருகிறார். இவருக்கு 'யூனிவர்சல் பாஸ்' என்ற பட்டப்பெயரும் உள்ளது.
வயது நாற்பதைத் தாண்டியும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கிறிஸ் கெயில், தனது ஓய்வு குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 'என்னால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால், நான் 45 வயது வரை கிரிக்கெட்டில் இருந்து விலக வாய்ப்பில்லை. அதே போல, இன்னும் இரண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடிய பின்னரே ஓய்வு குறித்து ஆலோசிப்பேன்' என கெயில் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை மற்றும் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை மனதில் வைத்து தான் கெயில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என தெரிகிறது.