அந்த '5 பேரு' இவங்க தான்.. 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த எல்லோ ஆர்மி.. நீங்க எதிர்பார்த்த பிளேயர் இருக்காங்களா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 15, 2019 04:22 PM
வீரர்களை அணிமாற்றம் செய்வது, பிற அணிகளில் இருந்து வீரர்களை எடுப்பது ஆகியவை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அணிமாற்றம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மும்பை அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக்கொண்டன.
Wishing our silent, charming southpaw only the very best. May you pounce high and hard for glory, Chaits! #Relea5ingToday #SuperForever #WhistlePodu 🦁💛 pic.twitter.com/vUIwZOQVdV
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2019
அதே நேரம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற அணிகள் இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தன. தொடர்ந்து நேற்று மாலை சென்னை அணி தங்கள் அணியில் இருந்து 5 வீரர்களை இன்று மாலை விடுவிப்பதாக அறிவித்தது. இதனால் அந்த 5 வீரர்கள் யார்? என அறிந்துகொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
Ever since the name #ThambiSambi came about, the journey has been like that of a family. Nandri @sambillings for all the #yellove! #Relea5ingToday #SuperForever #WhistlePodu 🦁💛 pic.twitter.com/gn0QOdegK0
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2019
இந்தநிலையில் சென்னை அணி தன்னுடைய டீமில் இருந்து சைதன்யா பிஸ்நோய் என்னும் இளம்வீரர் ஒருவரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது. 25 வயதான இவர் ஹரியானா மாநிலம் சார்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டரான இவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்து இருந்தது. அணியில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் குறித்து ரசிகர்களுக்கு அதிகம் தெரியவில்லை.
Thank you for wielding the willow with all the #yellove Dhruv! May super times follow you everywhere you go! #Relea5ingToday #SuperForever #WhistlePodu 🦁💛 pic.twitter.com/rdlPee1JNC
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2019
அதே நேரம் 2-வது வீரராக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸையும் 3-வது வீரராக டெல்லி வீரரான துருவ் ஷோரியையும், 4-வது வீரராக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லியையும் சென்னை அணி விடுவித்துள்ளது. அதேபோல 5-வது வீரராக ஹரியானா வீரர் மோஹித் சர்மாவையும் அந்த அணி விடுவித்துள்ளது.
Sending you all the whistles for an all-round show all round the year! May the Good Will continue, as always! #Relea5ingToday #SuperForever #WhistlePodu 🦁💛 pic.twitter.com/USW4IzIgtx
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2019
Our Purple Cap hero @imohitsharma18 has been having some troublesome injuries coming his way. Wishing our #yellove lion a speedy recovery to head back to the field. Go for Mo! #Relea5ingToday #SuperForever #WhistlePodu 🦁💛 pic.twitter.com/i2ctci4ntK
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2019