'ஐபிஎல் CONTINUE ஆயிருந்தா...' நானே கெளம்பி வீட்டுக்கு போய்டலாம்னு தான் இருந்தேன்...' - 'ரகசியத்தை' வெளியிட்ட பெங்களூர் அணி வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றது. அதன்பின் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவே ஐபிஎல் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய 31 போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் போட்டியில் இருந்து நானே விலக நினைத்தேன் என கூறியிருந்தார்.
அதில், என்னுடைய பெற்றோருக்கு மே 3ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் என்னுடைய தந்தைக்கு ஆக்சிஜன் லெவல் 85-86ஆக குறைந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருக்கும்போது ஆட்டத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப கஷ்டமாக இருந்தது.
பெற்றோருக்கு கொரோனா என்றதுமே, ஐபிஎல்லில் பிரேக் எடுத்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு 2 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது' எனக் கூறியிருந்தார்.
அதோடு நேற்றுதான் என் தந்தை வீடு திரும்பினார். ஆனால் முழுமையாக இன்னும் கொரோனாவில் இருந்து வெளிவரவில்லை. ஆக்ஸிஜன் லெவன் அதிகரித்துள்ளது, ஆனால் டெஸ்ட் ரிசல்ட் இன்னும் பாசிட்டிவ் என்றுதான் வருகிறது என்றார் சாஹல்.