யாருய்யா அது கோலி பேட்டை வச்சு விளையாடுறது..? பவுண்டரி அடிச்சு வேற அசத்தியிருக்காப்ல.. வைரல் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் பேட்டை வைத்து விளையாடிய வீரரின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று (09.02.2022) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 5 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த விராட் கோலியும் 18 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும், கே.எல்.ராகுல் 49 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை இந்திய அணி எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை ஒடியான் ஸ்மித் மற்றும் அன்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரோச், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ஃபேபியன் ஆலன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
Shot of the day
Clear class from goat himself#CricketTwitter #INDvsWI #chahal pic.twitter.com/7ORq1sBRif
— कुश🇮🇳 (@whyKushxD) February 9, 2022
இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டை வைத்து சுழற்பந்துவீச்சாளர் விளையாடியதாக போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 10-வது வீரராக களமிறங்கிய அவர் 10 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் அடித்தார். அதில் ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் பலரும் இந்த போட்டோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Goat at the crease.#INDvWI pic.twitter.com/mfZrYxQfBT
— Prithvi Kalra (@_Prithvi_kalra) February 9, 2022
Yuzi Chahal: THE FINISHER pic.twitter.com/mQBTfubshx
— Sudhanshu Ranjan Singh (@memegineers_) February 9, 2022
is that #chahal played with @imVkohli bat.@MRFWorldwide getting extra advertisement. It cannot be MRF sponsoring #chahal for his batting.#INDvsWI #INDvWI #NarendraModiStadium #IndianCricketTeam pic.twitter.com/Z4HD91j97l
— vijitashwa Mishra (@VijitashwaMisra) February 9, 2022