VIDEO: விட்டா அடிதடி ‘சண்டை’ ஆகிடும் போலயே.. பும்ராவை வம்புக்கு இழுத்த தென் ஆப்பிரிக்க பவுலர்.. ஓடி வந்து தடுத்த அம்பயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ ஜாக்சனுடன் மைதானத்தில் வார்த்தைப் போரில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 260 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ரகானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்களும் ஹனுமா விஹாரி 40 ரன்களும் எடுத்தனர்.
அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்க்கோ ஜான்சன் உடன் வார்த்தை போரில் ஈடுபட்டார். மார்கோ ஜான்சன் வீசிய பந்து பும்ராவின் தோள்பட்டையில் பலமாக அடித்தது. இதனை தூசி தட்டி விடுவது போல பும்ரா செய்தார்.
What happened there between Bumrah and Jansen?#INDvsSA pic.twitter.com/Auc4F2GMop
— Ashish Satyam (@AshishSatyam7) January 5, 2022
Bumrah vs Jansen🔥
Beauty of Cricket☺️#SAvIND pic.twitter.com/ppbZLLTpT6
— Over Thinker Lawyer 🇵🇰 (@Muja_q_Nikala) January 5, 2022
Love this from Bumrah. pic.twitter.com/abGfGFg9FA
— Johns. (@CricCrazyJohns) January 5, 2022
இதனை அடுத்து வீசிய பந்தும் பும்ராவின் மீது பட்டு பீல்டரின் கைக்கு சென்றது. அப்போது பும்ரா சிரிக்கவே, மார்கோ ஜான்சன் ஏதோ கோபமாக கூறினார். பதிலுக்கு பும்ரா கோபமாக மார்கோ ஜான்சனை நோக்கி அடிப்பது போல் சென்றார். இதனை பார்த்த அம்பயர் வேகமாக ஓடி வந்து இருவரையும் தடுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
