VIDEO: பந்து வீசும்போது வளைந்த கால்.. வலியால் துடி துடித்துப்போன பும்ரா.. அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123 ரன்களும், மயங்க் அகர்வால் 60 ரன்களும், ரஹானே 48 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும், மார்க்கோ ஜான்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
— Addicric (@addicric) December 28, 2021
Bumrah 😢 pic.twitter.com/rX2MaHUdzO
— N (@Nitinx18) December 28, 2021
இந்த நிலையில் இப்போட்டியில் பவுலிங் செய்த போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்திலேயே அவர் வலியால் துடித்து விழுந்தார். இதனை அடுத்து வேகமாக வந்த பிசியோ அவருக்கு முதலுதவி அளித்தார். ஆனாலும் காயம் அதிகமாக இருந்ததால் பும்ரா வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.