IPL இறுதிப்போட்டியில் திடீர் மாற்றம்.. 30 நிமிஷம் லேட்டா தான் மேட்ச் ஆரம்பிக்கும்.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி 30 நிமிடம் தாமதமாக தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read | அப்பாவை காணோம் என புகார் கொடுத்த மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. சென்னையில் ஷாக்..!
கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கிய 15-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 67 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 3 போட்டிகளே எஞ்சியுள்ளன. ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணிகளான சென்னை, மும்பை ஆகிய இரு அணிகள் பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறியன. அதேவேளையில், இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதனை அடுத்து 3-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி உள்ளது. இந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இன்று (20.05.2022) நடக்கும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை பொறுத்து ராஜஸ்தான் அணி, 3 அல்லது 4-வது இடத்தை பிடிக்கும்.
அதேவேளையில் 4-வது இடத்தில் 16 புள்ளிகளுடன் பெங்களூரு அணி இருந்தாலும் ரன் ரேட் குறைந்து காணப்படுகிறது. அதனால், டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நாளை நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பெங்களூரு அணி பிளே ஆஃப் தகுதி சுற்றிலிருந்து வெளியேறிவிடும். ஒருவேளை டெல்லி அணி தோல்வியடைந்தால், பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வரும் 29-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டி தொடங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, 8 மணிக்கு பிசிசிஐ மாற்றியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக சுமார் 6.30 மணியளவில் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சி முடிந்து 7.30 மணிக்கும் டாஸ் போடப்பட்டு, பின்னர் 8 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
