IPL-ல இருந்து இனி திடீர்னு விலகுனா ஆப்பு தான்.. புது விதிகளை ரெடி பண்ணும் BCCI..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் இருந்து திடீரென வெளிநாட்டு வீரர்கள் விலகுவதை தவிர்க்க பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டு முதல் லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. அதனால் மொத்தம் 10 அணிகள் மோதுவதால் போட்டியில் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் வெளிநாட்டு வீரர்கள் பலரும் காயம் காரணமாக திடீரென விலகுவது ஐபிஎல் அணிகளுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. தொடரின் பாதியில் வீரர்கள் விலகுவதால், அவர்களுக்கு மாற்று வீரர்கள் தேடுவது உள்ளிட்ட சிரமம் ஏற்படுவதாக ஐபிஎல் அணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதனால் இதுகுறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால், அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். அது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை அவரது காரணம் நியாயமானதாக இருந்தால் அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் போன்ற நடவடிக்கைகள் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் காயம் காரணமாக விலகியுள்ளனர். அதனால் அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த ஐபிஎல் தொடரின் போது பல வெளிநாட்டு வீரர்கள் பாதியிலேயே வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
