"27 வருஷமா எங்க அம்மா சொன்ன பொய்ய நம்பிட்டு இருந்தேன்.. அப்பறம் தான் அந்த உண்மை தெரிஞ்சது" KL ராகுல் சொல்லிய சுவாரஸ்ய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வரும் KL ராகுல் தன்னுடைய பெற்றோர் தனக்கு பெயர் வைத்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

"எப்போதான் அந்த 30 பேப்பரை க்ளியர் பண்ணுவ".. "எங்கம்மாவுக்கு அதுதான் கவலை".. கலகலத்த KL ராகுல் ..!
KL ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது பயணத்தை துவங்கினார் ராகுல். இவர் இதுவரையில் 43 டெஸ்ட் போட்டிகளிலும் 42 ஒருநாள் போட்டிகளிலும் 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ராகுல் தனக்கு பெயர் வைத்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை கூறியுள்ளார்.
பெயர் காரணம்
தனது அம்மா பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் திரைப்படம் ஒன்றில் அவருடைய பெயர் ராகுல் என இருந்ததால் அந்தப் பெயரையே தனக்கு வைத்ததாக ராகுல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"என்னுடைய அம்மா பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய ஒரு படத்தில் கதாநாயகனின் பெயர் ராகுல் என்பதால் எனக்கு அந்த பெயரை வைத்ததாக பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார்" என்றார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர்,"ஆனால் என்னுடைய நண்பர் ஒருவரிடத்தில் இதை நான் கூறினேன். அவருக்கு பாலிவுட் குறித்து பல தகவல்கள் தெரியும். என்னுடைய கதையைக் கேட்ட அவர் 'நீ கூறிய ஷாருக்கான் படம் வெளிவந்தது 1994 ஆம் ஆண்டு. ஆனால் நீ பிறந்தது 1992 ஆம் ஆண்டில். இதில் ஏதோ குழப்பம் இருக்கிறது' என என்னிடம் தெரிவித்தார். எனக்கு இது மிகவும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் தந்தது" என்றார்.
குழப்பம்
அதன் பிறகு தன்னுடைய பெற்றோரிடம் தன்னுடைய பெயர் காரணம் குறித்து ராகுல் கேட்டிருக்கிறார். அப்போது சுவாரசிய சம்பவம் ஒன்றினை அவரது பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கவாஸ்கரின் தீவிர ரசிகராக இருந்தவர் ராகுலின் தந்தை. சுனில் கவாஸ்கர் தன்னுடைய மகனுக்கு 'ரோஹன்' என பெயர் சூட்டினார். அந்த செய்தியை ரேடியோ வாயிலாக கேட்ட ராகுலின் தந்தைக்கு 'ரோஹன்' என்பது 'ராகுல்; என அவரது காதில் விழுந்திருக்கிறது. இதையடுத்து தனது மகனுக்கும் ராகுல் என அவர் பெயர் சூட்டியிருக்கிறார்.
"இதனை வெளியில் சொல்லாமல் ஷாருக்கானின் திரைப்படத்தின் அடிப்படையிலேயே தனக்கு இந்த பெயர் வைத்து விட்டதாக என்னிடம் 26-27 வருடங்களாக எனது பெற்றோர் தெரிவித்து வந்தனர்" என நகைச்சுவையுடன் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
ஆணிலிருந்து பெண்ணாக மாறிய நபர் வச்ச கோரிக்கை.. திருவள்ளூர் கலெக்டருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

மற்ற செய்திகள்
