"எப்போதான் அந்த 30 பேப்பரை க்ளியர் பண்ணுவ".. "எங்கம்மாவுக்கு அதுதான் கவலை".. கலகலத்த KL ராகுல் ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம்வரும் KL ராகுல் லாக்டவுன் சமயத்தில் டிகிரியை முடிக்குமாறு தன்னுடைய அம்மா கூறியதாக நகைச்சுவையுடன் தெரிவித்திருக்கிறார்.

ஆணிலிருந்து பெண்ணாக மாறிய நபர் வச்ச கோரிக்கை.. திருவள்ளூர் கலெக்டருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
KL ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது பயணத்தை துவங்கினார் ராகுல். இவர் இதுவரையில் 43 டெஸ்ட் போட்டிகளிலும் 42 ஒருநாள் போட்டிகளிலும் 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் தன்னுடைய பெற்றோரின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருப்பதாக ராகுல் நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது அம்மா குறித்து பேசிய ராகுல்," லாக்டவுன் சமயத்தில் 'நீ எப்போது அந்த முப்பது பேப்பர்களை பாஸ் செய்யப் போகிறாய்? நன்று படித்து ஒரு டிகிரி வாங்கு' என கூறினார். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறேன். நீங்கள் இன்னும் என்னை அந்த முப்பது பேப்பரையும் பாஸ் செய்ய சொல்கிறீர்களா? என்றேன். அதற்கு அவர் 'ஏன் செய்யக் கூடாதா?' என கோபமாக கேட்டார்" என சிரிப்புடன் குறிப்பிட்டார்.
மேலும் இது குறித்து பேசிய அவர்,"என்னுடைய தாய் மற்றும் தந்தை இருவருமே பேராசிரியர்கள். நான் என்னுடைய பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்தவன். அதன்பிறகு அறிவியல் பிரிவிற்கு செல்வதா அல்லது காமர்ஸ் எடுப்பதா என குழப்பத்தில் இருந்தேன். நான் காமர்ஸ் பிரிவிற்கு செல்லக்கூடாது என எனது பெற்றோர் நினைத்தனர். ஆனால் நான் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தேன்" என்றார்.
அரசு வேலை
இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தபோது ராகுலுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. இதுகுறித்து பேசிய ராகுல்," எனக்கு மத்திய அரசு வேலை கிடைத்தது. அதனால் என்னுடைய பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் நான் ஏற்கனவே நான்கு வருடங்கள் இந்தியாவிற்காக விளையாடினேன். ஆனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை" என்றார்.
கேப்டன்
அதிரடி ஆட்டக்காரரான ராகுல் முன்பு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெகா ஏலத்தில் ராகுலை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது. இதனை அடுத்து அந்த அணியின் கேப்டனாக ராகுல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
"அவர்கிட்ட சொல்லிவைங்க. தொலைச்சு கட்டிடுவேன்" கொந்தளித்த புதின் ..என்ன ஆச்சு..?

மற்ற செய்திகள்
