"பூமியில் தென்பட்ட பால் கடல்.." முதல் முறையாக கிடைத்த அரிய புகைப்படம்.. வியப்பில் மக்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, சற்று மனம் நிம்மதியாகவும், புத்துணர்ச்சி ஆகவும் இருக்க வேண்டும் என்றால், நிறைய பேர் செல்ல வேண்டும் என தேர்ந்தெடுக்கும் இடம், கடற்கரையாக தான் இருக்கும்.
Also Read | சுஷாந்த் சிங் வழக்கில் சிக்கும் நடிகை..? உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய NCB !!
அலையின் சத்தத்திற்கு மத்தியில், காற்று வாங்கிக் கொண்டு கரை ஓரம் நடந்து செல்லும் போது, அப்படியே ஒரு புதுவிதமான உணர்வு தோன்றி, நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
கடல் என்பது கவிதை போல தோன்றினாலும், இதற்குள்ளும் ஏராளமான ஆச்சரியங்கள் மற்றும் பல ரகசியங்களும் மூழ்கி கிடக்கிறது.
பால் போல மாறிய கடல்
அப்படி தற்போது கடல் ஒன்றைக் குறித்து வெளிவந்துள்ள தகவல், பலரையும் கடும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிரும் நிகழ்வுகள் என்பதை, சென்னை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளில் நிகழ்ந்ததை நாம் அறிந்திருப்போம். அதாவது, பாசி வகைகளில் நிகழும் வேதியல் மாற்றத்தால், கடல் அலை ஒளிர்வதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி ஒளிர்வது என்பது, நீலம் அல்லது பச்சை நிறத்தில் ஒளிர்வதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா கடல் பகுதியில், பால் போன்று வெள்ளை நிறத்தில் கடல் நீர் ஒளிர்ந்த நிகழ்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பான செயற்கைக் கோள் படங்கள், தற்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதும் உறுதியாகி உள்ளது. மேலும், இதனை தனது ஆய்வறிக்கை ஒன்றில், கொலராடோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல விஞ்ஞானி ஸ்டீவன் மில்லர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி, 2019 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் தெற்கே அமைந்துள்ள ஜாவா கடலில், Milky Sea எனப்படும் பால் கடல் வெளியின் செயற்கைக் கோள் படங்கள், சில தரம் குறைந்த படங்களுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை நிறத்தின் காரணம் என்ன?
அதே போல, ஜாவா கடல் பகுதியில், உலா வந்த படகு குழுவினர் எடுத்த புகைப்படங்களுடன் மில்லர் இதனை ஒப்பிட்டு பார்த்து, அவை பால் கடல்களை காட்டியுள்ளதையும் கூறி உள்ளார். இது தொடர்பாக படகு குழுவினரின் இருந்து ஒருவர் கூறியதன் படி, கடலின் நிறம் இருட்டில் ஒளிரும் நட்சத்திரம் போல இருந்ததாகவும், படகின் கேப்டன், 30 அடிக்கு கீழே இருந்தே கடல் பளபளப்பாக தோன்றியதை கவனித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற பால் கடல்கள், அரிய வகை பயோ லுமினசென்ட் பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படுவதாகவும், நீலம் அல்லது பச்சை நிறத்திற்கு பதிலாக, வெள்ளை நிறத்தில் கடல் நீர் ஒளிர்வதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். மேலும், பெரியளவில் வெளிப்படும் ஒருவகை நுண்ணுயிரிகளுக்கு இடையேயான saprophytic உறவு காரணமாக இப்படி மாறி இருக்கலாம் என்றும் கூறி உள்ளனர்.
வெள்ளை நிறத்தில் கடல் நீர் ஒளிரும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | மொத்தமா 1800 பேர்.. திடீரென வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்.. வருத்தத்தில் ஊழியர்கள்.. பின்னணி என்ன??