VIDEO: ‘சூட்டிங்ல என்னெல்லாம் பண்றாங்க பாருங்க’!.. ஹிட்மேன் பதிவிட்ட ‘ஜாலி’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிளம்பர படப்பிடிப்பின் போது வீரர்கள் செய்த சேட்டைகள் குறித்த வீடியோவை ரோஹித் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![Rohit Sharma\'s fun BTS video with Hardik Pandya, Suryakumar Yadav Rohit Sharma\'s fun BTS video with Hardik Pandya, Suryakumar Yadav](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/rohit-sharmas-fun-bts-video-with-hardik-pandya-suryakumar-yadav.jpg)
14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக சென்னை வந்துள்ள இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், விளம்பர படப்பிடிப்பின் போது சக வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாத்வ் ஆகியோருடன் தான் மேற்கொண்ட சேட்டைகளை வீடியோவாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘இது ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறுவது தான் என்றாலும் அணி வீரர்களுடன் இதை மேற்கொள்வது உற்சாகமான ஒன்று’ என ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)