ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட 'ஷாருக்கான்'.. "நீங்க சொல்றது எல்லாம் ரைட்டு தான் பாஸ், ஆனா.." ஷாருக்கானுக்கு 'ரசல்' கொடுத்த 'பதிலடி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று முன்தினம் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றிருந்த போட்டியில், மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 152 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் சொதப்பியது.
கடைசி 5 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்ட போதும், களத்தில் நின்ற தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) மற்றும் அதிரடி வீரர் ரசல் (Russell) ஆகியோரால் கூட இலக்கை அடைய முடியவில்லை. அதே போல, மும்பை அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால், ஜெயிக்க வேண்டிய போட்டியை கொல்கத்தா அணி தவற விட்டது.
எளிதான வெற்றியை கொல்கத்தா அணி கோட்டை விட்டதால், அந்த அணியின் பேட்டிங் வரிசை கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதே போல, கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் (Shahrukh Khan), தனது ட்விட்டர் பக்கத்தில், 'கொல்கத்தா அணியின் ஆட்டம் ஏமாற்றமளிக்கிறது. இதனால், அணியின் சார்பாக கொல்கத்தா ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.
Disappointing performance. to say the least @KKRiders apologies to all the fans!
— Shah Rukh Khan (@iamsrk) April 13, 2021
அணியின் மோசமான ஆட்டத்திற்காக, அதன் உரிமையாளர் மன்னிப்பு கேட்டிருந்தது, கடும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், ஷாருக்கான் கருத்திற்கு கொல்கத்தா அணி வீரர் ரசல் பதில் கருத்து தெரிவித்துள்ளார். 'நான் ஷாருக்கானின் ட்வீட்டை ஆதரிக்கிறேன். ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டி என்பது, அதன் இறுதி வரை யார் பக்கம் என்பதை கணிக்க முடியாத ஒன்றாகும்.
நான் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளேன். அதில், பல போட்டிகளில், திடீரென ஒரு அணியின் கைவசம் இருக்கும் போட்டி, சில விக்கெட்டுகள் விழுந்ததும் தோல்வியை தழுவ நேரிடும். இதனால், முடிவுகள் இப்படி தான் வரும் என்றும் நம்மால் கணித்து கூற முடியாது.
ஒரு போட்டியில் நாங்கள் வெற்றி பெறுகிறோமா அல்லது தோல்வி பெறுகிறோமா என்பதை விட, அந்த போட்டியின் முடிவில் என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் முக்கியம். நாங்கள் இனி வரும் போட்டிகளில், நிச்சயம் திரும்பி வருவோம். எனது அணி வீரர்கள் மீது அதிக நம்பிக்கையுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் இது எங்களுக்கு இரண்டாவது போட்டி தான். இன்னும் விளையாட நிறைய போட்டிகள் உள்ளது. தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டு, இனி வரும் போட்டிகளில் திறமையுடன் ஆடுவோம்' என தங்களது அணியின் மீதான விமர்சனங்களுக்கு ரசல் பதில் தெரிவித்துள்ளார்.