"இன்னைக்கி 'மேட்ச்'ல.. மொத்த 'FOCUS'ம் இவரு மேல தான்.. வாய்ப்பு கெடச்சா பொளந்துடுவாரு போல".. 'தமிழக' வீரரால் எழுந்துள்ள 'எதிர்பார்ப்பு'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரண்டு அணிகளிலும் கெயில், பட்லர் போன்ற அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் வீரர்கள் உள்ளதால், நிச்சயம் இன்றைய ஆட்டம் அதிரடியுடன் நிரம்பியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதில், பஞ்சாப் அணிக்காக இன்று களமிறங்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் தமிழக வீரர் ஒருவரின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், பஞ்சாப் அணியால் 5.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஷாருக்கான், அதற்கு முன்பாக நடைபெற்றிருந்த சையது முஷ்டாக் அலி தொடரில், தமிழக அணிக்காக மிகவும் அசத்தலாக ஆடி அசத்தியிருந்தார். அது மட்டுமில்லாமல், அந்த தொடரின் பல போட்டிகளில், தமிழக அணி வெற்றி பெறவும் அவர் காரணமாக இருந்தார்.
அதிரடியாக ஆடி போட்டியை முடித்து வைக்கும் திறனுடைய ஷாருக்கான், பஞ்சாப் அணிக்காக பயிற்சியில் ஈடுபட்ட போதும், கொஞ்சம் கூட திணறல் எதுவும் இல்லாமல், அனுபவ வீரர் போல் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அந்த அணியின் பயிற்சியாளரான கிரிக்கெட் ஜாம்பவான் கும்ப்ளே கூட, ஷாருக்கானுக்கு பயிற்சியின் போது, நான் பந்து வீசப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
அந்த அளவுக்கு அதிரடியாக ஆடி, ஆட்டத்தின் போக்கை மற்றும் திறன் கொண்ட ஷாருக்கான், இன்றைய போட்டியில், பஞ்சாப் அணிக்காக களமிறங்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் ஒட்டு மொத்த ஐபிஎல் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் பார்வை, ஷாருக்கானின் ஆட்டத்தை கவனிக்க வாய்ப்புள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம், ஐபிஎல் தொடர் மூலம், பல இளம் வீரர்கள் அசத்தி, இந்திய அணிக்காக தேர்வாகி வரும் நிலையில், இந்தாண்டு இந்தியாவில் வைத்து, டி 20 உலக கோப்பை தொடரும் நடைபெறவுள்ளது. இதனால், இந்த சீசன்களில் சிறப்பாக ஆடக் கூடிய இந்திய வீரர்களை, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நிச்சயம் அதிகம் கவனிக்கும் என்றே தெரிகிறது.
ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே, அதிரடியாக ஆடுவார் என்ற எதிர்பார்ப்பை ஷாருக்கான் ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய போட்டியில், அணியில் இடம் கிடைத்து, அவர் சிறப்பாக ஆடினால், நிச்சயம் அதிகம் தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, இன்றைய பஞ்சாப் அணியில் ஆடும் லெவலை கணித பலரும், ஷாருக் கான் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.