19 வயசுல காலேஜ் படிப்பை விட்டு வெளியேறிய மாணவர்.. இன்னைக்கு அவர் லெவலே வேற.. சொத்து மதிப்பை கேட்டா தலையே சுத்திடும்..!
முகப்பு > செய்திகள் > கதைகள்19 வயதில் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு புது நிறுவனம் ஒன்றை துவங்கிய மாணவர் இப்போது பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.

பாதியில் நின்ற படிப்பு
அமெரிக்காவில் வசித்துவரும் அலெக்ஸாண்டர் வாங் என்னும் 25 வயது இளைஞர் உலகின் இளவயது கோடீஸ்வரராக மாறியுள்ளார். சிறுவயது முதலே கணக்கு பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட வாங், புகழ்பெற்ற MIT கல்லூரியில் machine learning படிப்பில் சேர்ந்தார். ஆனால், கோடிங் செய்வதில் இருந்த அவரது ஆர்வம் காரணமாக 19 வயதிலேயே கல்லூரி படிப்பை விட்டு வெளியேறி Scale AI என்னும் நிறுவனத்தை துவங்கினார். வாங்-கின் இந்த நிறுவனம் தற்போது அமெரிக்க ராணுவம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் ப்ராஜெக்ட்களில் இயங்கிவருகிறது.
Scale AI
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக தரவுகளை ஆராயும் நிறுவனம் தான் இந்த Scale AI. வாங் தனது 17 வது வயதில், லூசி கியோ என்பவரது அறிமுகத்தை பெற்றார். கோடிங் செய்வதில் வாங்-ற்கு இருக்கும் அபார ஆற்றலை கண்டறிந்த லூசி புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கும் முயற்சி பற்றி அவரிடம் பேசியுள்ளார். அப்படித்தான் Scale AI நிறுவனம் துவங்கப்பட்டது. வாங் - இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
அமெரிக்காவின் கப்பற்படை, ராணுவம் ஆகியவற்றிற்காக பணிபுரிந்துவரும் இந்த நிறுவனம் செயற்கை கோள்களில் இருந்து வரும் தகவல்களை துல்லியமாக ஆராய்கிறது. அதுமட்டுமல்லாது உலகின் 300 பெரிய நிறுவனங்களுடன் Scale AI நிறுவனம் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறது.
பெற்றோர் போட்ட விதை
வாங்-ன் பெற்றோர் அமெரிக்க ராணுவத்தின் ஆயுதங்கள் தயாரிப்பு பிரிவில் இயற்பியலாளர்களாக இருந்தவர்கள். அப்போதிலிருந்தே ராணுவம், செயற்கைகோள்கள் குறித்து ஆர்வத்துடன் அறிந்துவந்த வாங் தற்போது அமெரிக்க ராணுவத்துடனேயே இணைந்து பணியாற்றிவருகிறார்.
Scale AI நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை வாங் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2018 ஆம் ஆண்டில் 30 வயதுக்குட்பட்ட பணக்காரர்களின் பட்டியலில் வாங் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
19 வயதில் கல்லூரி படிப்பிலிருந்து வெளியேறி, தனியாக நிறுவனம் ஒன்றை துவங்கிய வாங், உலகின் இளம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
