‘இந்தியாவின் கனவு திட்டம்’.. வெற்றிகரமாக விண்ணைப் பிளந்து சென்ற சந்திராயன்-2..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Jul 22, 2019 05:40 PM
வெற்றிகரமாக சந்திராயன்-2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலாவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக சுமார் பத்து வருடங்களாக சந்திராயன்-2 விண்கலத்தின் பணிகள் மும்முறமாக நடைபெற்று வந்தன. சுமார் 978 கோடி ரூபாய் செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திராயன்-2 விண்கலத்தை வடிவமைத்து முடித்தது. இதனை அடுத்து கடந்த திங்கள் கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு சந்திராயன்-2 கொண்டு செல்லப்பட்டது. சந்திராயன் கவுன்ட் டவுன் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிபொருள் நிரப்புவதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது. இதனை அடுத்து இன்று(22.07.2019) மதியம் சரியாக 2.43 மணியளவில் சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அப்போது விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். சந்திராயன்-2 சுமார் 16 நிமிடங்களில் பூமியின் வட்டப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இத்தனை வருடங்கள் சந்திராயன்-2 விண்கலத்திற்காக கடின உழைப்பை கொடுத்த சக விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் தனது நன்றியை தெரிவித்தார்.