'மனசுல பட்டத பேசுவார்: உருகிய பிரதமர்'.. மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி மறைவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 08, 2019 10:29 AM

உடல்நலக் குறைவு காரணமாக, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி. 95 வயதான அவர் தனது வீட்டிலேயே மருத்துவம் பெற்று வந்த நிலையில் இன்று காலை மரணம் அடைந்தார்.

eminent jurist,Ex Union minister Ram Jethmalani passes out

பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னதான இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்து மாகாணத்தில் பிறந்த ராம்ஜெத்மலானி, 17வது வயதில் சட்டத்துறையில் நுழைந்தவர். 2ஜி வழக்கு, பங்குச் சந்தை ஊழல் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வாதாடியவர் ராம்ஜெத்மலானி.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் ஆட்சியின்போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் ராம்ஜெத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராம்ஜெத்மலானி மனதில் பட்டதை பேசக்கூடியவர் என்றும், எமர்ஜென்சி காலக்கட்டத்தில் மக்கள் உரிமைக்காக வலிமையான மனோபலத்துடன் பங்காற்றியவர் என்றும் பிரதமர் மோடி தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

Tags : #UNIONMINISTER #PASSESAWAY #RAMJETH MALANI #JURIST