‘பாக்கதானே போறீங்க.. இந்த சந்திரயானோட .. சிறப்பான .. தரமான பல வேலைகளை!’.. இத படிங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 20, 2019 02:10 PM

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

chandrayaan 2 enters into lunar orbit, ISRO achievement

சந்திரயான்-2 பயணத்தில் இன்று காலை 9 மணியளவில் மேலும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், சந்திரயான்-2 வில் அனுப்பப்பட்டுள்ள வாகனம் நிலவின் தென் துருவத்தில் இறங்குவதோடு,நிலவின் சுற்றுவட்டப்பாதையில், ஏற்கனவே திட்டமிட்டபடி துல்லியமாக, சுமார் 30 நிமிடங்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திராயன்-2 செலுத்தப்பட்டது.

இதனையடுத்து நிலவினை, நீள்வட்டப்பாதையில் சந்திரயான்-2  தற்போது சுற்றி வருகிறது. வரும் 28, 30, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சந்திரயான்-2 இன்னும் நிலவை நெருங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு லேண்டர் விக்ரம் நிலவில் தறையிறங்கத் தொடங்கி 1.55 மணிக்கு தரையிறக்கும் திட்டம் உள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளர்.

Tags : #CHANDRAYAAN2 #MOON #LUNAR #CHANDRAYAAN2THEMOON