இந்த அண்ணனால உனக்கு ‘அத’ வாங்கி தர முடியலையேம்மா...! ‘தங்கச்சிக்கு கொடுத்த வாக்குறுதி...’ - அண்ணன் எடுத்த விவரீத முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Aug 06, 2020 01:16 PM

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தனில் தங்கைக்கு சைக்கிள் வாங்கி தர முடியாததால் 22 வயது இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

UP youth train suicide not buying cycle sister rakshabandn

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் கோடன்பூர்வா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான புட்டி லால் என்னும் இளைஞர் இந்த ஆண்டு ரக்ஷா பந்தனுக்கு தன் தங்கைக்கு சைக்கிள் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் இப்போது உள்ள சூழலில் அனைவரது குடும்பத்திலும் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளது. அதே போல் புட்டி லாலுக்கும் பண தட்டுப்பாடு ஏற்பட்டு தன் வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை.

மேலும் ரக்ஷா பந்தன் அடுத்த நாள் புதன்கிழமை புட்டியை வீட்டில் காணவில்லை. அவரது குடும்பத்தார் கிராமம் முழுவதும் ஆரை தேடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஊர்காரர் ஒருவர் பராஜ்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் தடங்களில் துண்டிக்கப்பட்ட உடல் பற்றி கிராமத்து மக்களிடம் கூறியுள்ளார். இதை அறிந்த புட்டியின் குடும்பத்தர் ரயில் நிலையம் சென்று இறந்த கிடந்த சடலம் தன் மகன் தான் என அடையாளம் காட்டினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் புட்டி லாலின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புட்டி லாலின் மூத்த சகோதரர் சூரஜ் கூறும் போது, "புட்டி எங்கள் சகோதரிக்கு ரக்ஷா பந்தன் பரிசாக சைக்கிள் பரிசளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவரிடம் பணம் குறைவாக இருந்தது. அதனால் தங்கைக்கு சைக்கிள் வாங்க முடியவில்லை என வருத்தமாக இருந்தார். நங்கள் அடுத்த வருடம் வாங்கிக்கொள்ளலாம் என சமாதானம் செய்தோம். எனக்கூறினார்.

மேலும் செவ்வாய் கிழமை  எங்களுடன் சேர்ந்துதான் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றார். ஆனால் புதன்கிழமை காலையிலிருந்து வீட்டில் காணவில்லை என மனவருத்ததோடு கூறினார்.

Tags : #BICYCLE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UP youth train suicide not buying cycle sister rakshabandn | India News.