'அத நான் சொல்லணும்.. நீங்க யாரு?'.. RAHUL GANDHI-க்கு LOK SABHA தலைவர் பரபரப்பு பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Alagulakshmi T | Feb 03, 2022 03:33 PM

டெல்லி, 03 பிப்ரவரி, 2021:- நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே ராகுல் காந்தி தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்ற விவாதத்தை முன்வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது பேசிய ராகுல் காந்திக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நாடாளுமன்ற நடைமுறை குறித்து விளக்கியுள்ளார்.

you cant give permission Says LS Speaker to Rahul Gandhi

'அந்த' புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் 4 பேஜ்கள்.. இன்பார்மர் கொடுத்த இன்பர்மேசன்.. தட்டி தூக்கிய சென்னை போலீஸ்!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய போது பாஜகவைச் சேர்ந்த எம்பி பேசுவதற்காக முயன்றபோது அவரை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் எப்போதும் காரச்சார விவாதத்திற்கு துளியும் குறைவில்லாது காணப்படும். அந்த வகையில் ராகுல் காந்தி பேசியபோது, பாஜகவை சேர்ந்த எம்பி கமலேஷ் பாஸ்வானின் பெயரை குறிப்பிட்டதோடு மட்டுமில்லாமல் தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர் என தெரிவித்தார். பாஜகவைத் தவறான கட்சி எனவும் அதில் உள்ள நல்ல மனிதர் இவர் என ராகுல் காந்தி தெரிவித்ததற்கு

பாஜக எம்பி கமலேஷ் குறுக்கே எழுந்து பேச முயன்றபோது, அவைத்தலைவர் ஓம் பிர்லா அனுமதி அளிக்காமல் ஒருவர் பேசும் பொழுது இடையில் பேசக்கூடாது. அவர் தனது உரையை முடித்த பிறகுதான் பேச அனுமதிக்க முடியும் என கூறியுள்ளார்.

பின்னர் பேச்சை தொடர்ந்த ராகுல் காந்தி தான் ஒரு ஜனநாயகவாதி என்பதால் பாஜக எம்பி கமலேஷ் அனுமதிப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் பேச அனுமதிக்க நீங்கள் யார்? என்றும், ”நீங்கள் அனுமதிக்க முடியாது” என்றும், மேலும் ”யாரையும் பேச அனுமதிக்க உங்களுக்கு உரிமை இல்லை” எனவும், அது ”அவைத்தலைவருக்கே உள்ள அதிகாரம்” எனவும் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து காரச்சார வாக்குவாதம் வெளிவரும் நிலையில் தற்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா ராகுல்காந்திக்கு பதில் அளித்தது காரச்சாரத்தின் உச்சிக்கே சென்று விட்டது.

பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வரும் புது வசதி.. நம்மல எமோசனலாக்க ரூம் போட்டு யோசிச்சுருங்கப்பா மெட்டா குரூப்!

Tags : #RAHUL GANDHI #BUDGET2022 #LS SPEAKER #ராகுல் காந்தி #சபாநாயகர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. You cant give permission Says LS Speaker to Rahul Gandhi | India News.