“சிம்ரன் என்னடா இதெல்லாம்? உன்ன நம்பித்தானே இப்டி செஞ்சோம்!”.. ‘பெண் போலீஸின் லீலை.. அதிர்ந்த அதிகாரிகள்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாமராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீசார் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த போலீஸ் உட்பட காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைவருமே தனிமைப்படுத்தப் பட்டனர்.

அவர்களது குடும்பமும் தனிமைப் படுத்தப் பட்டது. அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் போது அந்த காவல் நிலைத்தில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் ஒருவர், தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அவரையும் தன்னுடன் சேர்த்து தனிமைப்படுத்த வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார். இதனை அடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தபால் துறையில் வேலை பார்த்து வந்த ஒருவரை அழைத்து வந்து தடுப்பு முகாமில் இந்தப் பெண் போலீசுடன் சேர்த்து தனிமைப்படுத்தி வைத்தனர். இதற்கிடையில் பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா உள்ளதாகவும், ஆனால் அவர் பெண் போலீஸ் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் இருப்பதாகவும், அவரை மீட்டுத் தரவேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார்.
விசாரித்ததில் கொரோனா தடுப்பு முகாமில் உள்ள பெண் போலீசுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை கண்டுபிடித்த போலீஸார், அவருடன் கொரோனா முகாமில் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதையும், இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். கடந்த ஆண்டு ஒரு அரசு நிகழ்ச்சியின்போது இந்த பெண் போலீஸும், தபால் துறையில் வேலை பார்த்து வந்த அந்த நபரும் சந்தித்துள்ளதாகவும் அதன் பின்னர் இருவரும் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரும் வெவ்வேறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

மற்ற செய்திகள்
