விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கணவனுக்கு தெரியவந்த உண்மை.. உடனே சுதாரிச்சுக்கிட்ட மனைவி போட்ட பிளான்.. மொத்த கேஸையும் முடிச்சு வச்ச ஒரு போன்கால்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் கணவரை கொலை செய்துவிட்டு விசாரணையை குழப்பிய மனைவியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த வழக்கில் ஒரு போன்கால் போலீசாருக்கு உதவியாக இருந்திருக்கிறது.
![Wife slays husband With the help of lover arrested Wife slays husband With the help of lover arrested](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/wife-slays-husband-with-the-help-of-lover-arrested.png)
Also Read | "அது நெனச்சுப்பார்க்க முடியாத வலி".. பில்கேட்ஸ்-ன் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் உருக்கம்.. முழு விபரம்..!
உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சுபா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருணம் நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ராஜேஷ் பணிபுரிந்து வந்ததால் வீட்டில் சுபா மட்டும் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமைர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், தசரா விடுமுறைக்காக வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் ராஜேஷ்.
சந்தேகம்
அப்போதுதான் தனது மனைவியின் நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இரவு நேரத்தில் அதிக நேரம் போன் பேசுவதை சுபா வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். இதனை ராஜேஷ் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் காவல்துறைக்கு போன் செய்த சுபா தனது கணவர் ராஜேஷ் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
விசாரணை
இதனையடுத்து இதுகுறித்து விசாரணையில் போலீசார் இறங்கினர். அப்போது, ராஜேஷின் சகோதரரிடம் போலீசார் விசாரித்தபோது அவர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. ராஜேஷ் இறந்துபோனதாக சொல்லப்பட்ட நேரத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் தனக்கு போன் செய்ததாக தெரிவித்திருக்கிறார் ராஜேஷின் சகோதரர். மேலும், அவர் மகிழ்ச்சியுடனேயே பேசியதாகவும், குழப்பதிலோ மன அழுத்தத்திலோ இருந்ததாக தெரியவில்லை எனவும் தனது சகோதரர் இப்படி ஒரு முடிவை அவர் எடுக்க வாய்ப்பில்லை எனவும் போலீஸாரிடத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து, சுபாவின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அப்போது, அவருடைய போனை காவல்துறையினர் பரிசோதனை செய்திருக்கின்றனர். அதில், குறிப்பிட்ட எண்ணிற்கு இரவு நேரத்தில் சுபா போன் பேசியது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுபாவே தனது காதலர் சுமைருடன் சேர்ந்து ராஜேஷை கொலை செய்துவிட்டு நாடகமாடியது காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)