"ஒழுங்கா சேலை கட்டத் தெரியல".. மனைவி மீது வந்த கோபம்.. லெட்டர் எழுதி வச்சுட்டு கணவர் செஞ்ச விபரீத காரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவிக்கு சரியாக சேலை கட்டத் தெரியவில்லை என லெட்டர் எழுதி வைத்துவிட்டு கணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.
திருமணம்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரத்தின் முகுந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் சமாதன் சேபிள். 24 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. சமாதனை விட அவருடைய மனைவிக்கு 6 வயது குறைவு என தெரிகிறது. இந்நிலையில், நேற்று தனது வீட்டில் சமாதன் உயிரை மாய்த்துக் கொண்டது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்படவே, விரைந்து வந்த போலீசார் சமாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடிதம்
சமாதனின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது வீட்டை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய முகுந்தவாடி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் பிரம்ம கிரி," முகுந்த் நகர் பகுதியில் 24 வயதான நபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவருடைய வீட்டிற்கு விரைந்து சென்றோம். பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடலை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடைய வீட்டில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
சேலை கட்டத் தெரியவில்லை
சமாதன் எழுதிய கடிதத்தில், தனது மனைவிக்கு ஒழுங்காக சேலை கட்டத் தெரியவில்லை, பிறரிடத்தில் பேசவோ, நடக்கவோ தெரியவில்லை என குறிப்பிட்டிருந்ததாக காவல்துறை அதிகாரியான கிரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் என்ன? என்ற ரீதியில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கிரி குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவிக்கு சேலை கட்டத் தெரியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம் கணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8