சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முனைப்பில் உலக நாடுகள் பலவும் தீவிரமாக இறங்கி உள்ளன. இதில் ரஷ்யா தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என முந்திக்கொண்டு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும் என விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடந்த வாரம் வியாழக்கிழமை தெரிவித்தார். ஆனால் சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று அவர் கூறி உள்ளார்.
இதனால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சுகாதார பணியாளர்களுக்கு அதில் முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கோவாக்சின் இந்த வருட இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.