‘இரண்டு அவிச்ச முட்டையும், ஆம்லெட்த்தானே கேட்டேன்’... 'ஓட்டலின் பில்லைப் பார்த்து'... 'ஷாக்'கான வாடிக்கையாளர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 12, 2019 10:27 AM

மும்பையில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில், இரண்டு அவித்த முட்டைகளுக்கு வசூலித்த கட்டணத்தின் பில் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Forget bananas, 2 boiled eggs can cost you Rs 1,700

சமீபத்தில், இந்தியில் பிரபல நடிகராக விளங்கும் ராகுல் போஸ் படப்பிடிப்புக்காக சண்டிகர் சென்றுள்ளார். அங்கு உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார். உடற்பயிற்சி முடிந்ததும் வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த வாழைப்பழத்துடன் வந்த பில்லில், இரண்டு பழங்களுக்கான விலை, 375 ரூபாய் எனவும், ஜி.எஸ்.டி வரி ரூ.67.50 எனவும் ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50 என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ராகுல், தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து விவரமாக வெளியிட்டார்.

இந்நிலையில் கார்த்தி தார் என்பவர் மும்பையில் உள்ள ஃபோர் சீசன்ஸ் என்ற ஓட்டலில் ஆம்லெட், அவித்த முட்டை, கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்காக அவர் காத்திருந்தார். அதன்பிறகு ஓட்டல் நிர்வாகம் கொடுத்த விலைப்பட்டியலை பார்த்து கார்த்தி தார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஓட்டல் நிர்வாகம் 2 அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 கட்டணம், 1 ஆம்லெட்டுக்கு ரூ.850 கட்டணம் என பில் போட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் அந்த பில்லினை புகைப்படம் எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘2 முட்டையின் விலை ரூ.1700. பணக்கார கோழியாக இருக்கும் போல’ என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #BOILED EGG #FOURSEASONSHOTEL #CUSTOMER #MUMBAI