'கங்கையில் டால்பின்கள் துள்ளலுடன் நீச்சல்...' அடடா...! 'என்ன ஒரு அழகிய கண்கொள்ளா காட்சி...' வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 27, 2020 11:00 PM

இந்தியாவின் தேசிய நதியான கங்கையில் டால்பின்கள் நீந்தி விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Video of dolphins swimming in the Ganges River

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனிதர்கள் வீட்டுக்குள்ளேயும், பறவை விலங்குகள் எந்தவித இடையூறும் இன்றி தங்களின் வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்து வருகின்றன.

இதில் நீர்நிலைகளும், ஆறுகளும் எந்தவித தொழிற்சாலை கழிவுகள் கலக்காமல் தங்களுக்குரிய அழகுடன் ஜொலித்து வருகிறது. கங்கையும் தன் அழகை வெளிப்படுத்த தொடங்கியது அனைவரையும் உற்றுப்பார்க்க வைத்தது.

மேலும் இந்தியாவின் தேசிய நதியாக கருதப்படுகிறது கங்கை ஆறு. இந்தியாவில் ஊரடங்கிற்கு முன்பு தன் இயற்கையான பொலிவை இழந்து காணப்பட்ட கங்கை, தற்போது மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு தரம் உயர்ந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் கங்கை நதி தூய்மையடைந்து அழிவின் விளிம்பில் இருக்கும், நன்னீர் டால்பின்கள் நீந்தி விளையாடுகின்றன. இந்த அழகிய கண்கொள்ளா காட்சியை வன அலுவலர் ஒருவர் வீடியோவாக எடுத்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.