'கங்கை நதியில் மூழ்கிய சிறுவன்'... 'காப்பாற்ற முயன்ற ஒரே குடும்ப இளைஞர்கள் 7 பேர் பலி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 11, 2019 05:14 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் குளித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Seven of family drown in Ganga in Amroha, UP

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், லுகாரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் முடியிறக்கும் நிகழ்ச்சி மற்றும் வழிபாடு நடத்துவதற்காக திங்கள்கிழமையன்று பிரிஜ்காட் பகுதிக்கு வந்திருந்தனர். பின்னர், அங்குள்ள கங்கை நதியில் குளித்தனர். படிக்கட்டில் நின்றிருந்தபோது, கால் வழுக்கி நீருக்குள் சிறுவன் ஒருவன் விழுந்து மூழ்க தொடங்கினார்.

அவரை காப்பாற்றும் நோக்கத்தில், அதே குடும்பத்தை சேர்ந்த 9 இளைஞர்களும் ஒருவர்பின் ஒருவராக தண்ணீருக்குள் குதித்தனர். ஆனால் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், எல்லோரையும் தண்ணீர் அடித்துச் சென்றது. அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, நீச்சல் தெரிந்தவர்கள் தண்ணீரில் குதித்தனர். அவர்களும் மூழ்கினர். இவர்களில் 3 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ஆற்றில் மூழ்கியவர்களில் 5 பேரின் உடல்களை மீட்டனர். 2 பேரின் உடல்களை தேடி வருகின்றனர். இந்த துயர சம்பவத்திற்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும்படி மாநில அரசுக்கு மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதி உள்ளார்.

Tags : #DROWN #GANGA #AMROHA