'கங்கை நீரை இனிமேல் அள்ளி பருகலாம்...' 'அந்த அளவுக்கு தண்ணீர் சுத்தம் ஆகியிருக்கு...' நிபுணர்கள் அறிக்கை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் ஊரடங்கு காரணமாக கங்கை நதி என்றும் இல்லாத அளவுக்கு தூய்மை அடைந்துள்ளதாகவும், ஆற்றின் தண்ணீர் குடிக்கக் கூடிய அளவுக்கு தரம் உயர்ந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் செயல்படும் கடைகளை தவிர மற்ற அனைத்து தொழில்துறை நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எந்த காரணம் சொல்லியும் வெளியே வர முடியவில்லை. இந்த சூழலில் சில இடங்களில் இயற்கை தன்னை மறுஉருவாக்கம் செய்து வருகிறது. இது தொடர்பான செய்திகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதுபோல தற்போது கங்கை ஆற்றின் தண்ணீரின் தரம் உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளனர். மேலும் குடிக்கக் கூடிய அளவுக்கு தரம் உயர்ந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹரித்வாரின் மலைத் தொடர்கள் கூட மக்கள் செல்லமுடியாதபடி அடைக்கப்பட்டுள்ளதால் குப்பைகள் கொட்டுவது உள்ளிட்ட செயல்கள் குறைந்துள்ளதால் தண்ணீர் தரம் உயர்ந்துள்ளது. ஆற்றில் உள்ள மீன்களைக் கூட பார்க்க முடிகிறது.
ஊரடங்கு காரணமாக கடந்த சிலநாட்களாக தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. கங்கை ஆற்றுக்கு வரும் கழிவுகளில் 10-ல் 1 சதவீதம் இதிலிருந்து தான் வருகிறது எனவும், தற்போது ஊரடங்கால் கழிவுகள் இல்லாததால், தண்ணீர் தரம் 50 சதவீத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும், கடந்த சில வாரங்களாக இந்தப் பகுதியில் மழை பெய்துள்ளது. அதன் காரணமாக தண்ணீரின் தரம் உயர்ந்துள்ளது என ஐ.ஐ.டி பேராசிரியர் கூறியிருந்தார்.