கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தி திடீரென தூக்கிட்டு தற்கொலை
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எடியூரப்பாவின் மூத்த மக்கள் பத்மாவதி. இவரது மகளான சவுந்தர்யா, பெங்களூர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில், மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சவுந்தர்யாவிற்கு திருமணமும் நடைபெற்றுள்ளது. மத்திய பெங்களூருவில், மவுண்ட் கார்மல் கல்லூரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில், கணவருடன் வசித்து வரும் சவுந்தர்யாவிற்கு ஆறு மாத கைகுழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், சவுந்தர்யா தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக, பெங்களூர் ஹை கிரவுண்ட்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை அறிந்ததும், கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
