ஒரே ஒரு கிரிக்கெட் பந்தினால்.. ஒட்டுமொத்த ஊரிலும் வெடித்த கலவரம்.. புழுதி பறக்க நடந்த சண்டை
முகப்பு > செய்திகள் > இந்தியாகலபுர்கி : சாதாரண கிரிக்கெட் பந்து காரணமாக ஒரு கிராமமே இரண்டாக பிரிந்து அடித்து கொண்டு சண்டை போடும் சம்பவம் கர்நாடகாவில் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இவ்வளவு பிட்காயின் வச்சிருக்காரா? வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்
கிராமங்களில் உருவாகும் சண்டை:
கிராமத்தில் சண்டை சச்சரவு ஏற்படுவது என்பது சாதாரணமான விஷயம் தான். அதும் பெரும்பாலான கிராமங்களில் மோதல் ஏற்பட அந்த ஊர்களில் இருக்கும் இளவட்டங்களே காரணமாக இருப்பார்கள். அதில் பஞ்சாயத்து நடக்கும் கூத்து வேறு நடைபெறும்.
சினிமாக்களில் வருவது போல ஆடு திருட்டு, மாடு திருட்டு, குடி தண்ணீருக்கு சண்டை, காதலுக்கு எதிர்ப்பு என பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கிராமங்களும் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக கிராமங்களில் அடிக்கடி திருவிழாக்களும் அது தொடர்பாக கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கிரிக்கெட் போட்டிகள்:
அப்போது அதெற்கென நிகழ்ச்சிகளை இணைக்கும் குழு, நிதி நிர்வாகம், ஒருங்கிணைப்பு என பல குழுக்கள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு குழுவால் தான் ஒரு கிராமமே தங்களுக்குள் அடித்து கொண்டுமாலும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கலபுர்கி மாவட்டத்தில் கோபுரா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக வரவு செலவு குறித்து இளைஞர்கள் விவாதித்துள்ளனர்.
யார் கணக்கில் சேர்ப்பது?
அப்போது சுமார் 50 ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் பந்து வாங்கியதற்கான தொகை யார் கணக்கில் சேர்ப்பது என்பது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது. அப்போது அந்த குழுவில் இருந்த நபர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாகி, பின்னர் கைகலப்பானது.
நடுரோட்டில் கும்பலாக நடந்த தாக்குதல்:
இரு குழுக்களில் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக ஆண்கள், பெண்கள் என அவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து நடுரோட்டில் சரமாரியாக கம்பு, கைகளால் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களில் இணையத்தில் காணப்படுகிறது. ஒரு 50 ரூபாய் பந்து ஒரு கிராமத்தையே இரு அணிகளாக பிரித்து கலவரத்தை உண்டு பண்ணிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.