வெளிய போங்க.. எங்க கண்ணுல முழிக்க கூடாது.. காதல் திருமணம் செய்த ஜோடி எடுத்த சோக முடிவு
முகப்பு > செய்திகள் > இந்தியாமைசூர்: கர்நாடகாவில் காபிஹால் திருமணம் செய்த ஜோடி ஒன்று பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் இருக்கும் சிங்கமாரனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயதான ராகேஷ். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது அர்ச்சனா என்பவரை கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராகேஷ் மற்றும் அர்ச்சனா இருவரின் காதல் விவகாரம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இருவரையும் நேரில் அழைத்து எச்சரித்தும் இருக்கின்றனர்.
வீட்டை விட்டு வெளியேறி திருமணம்:
அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என நினைத்து ராகேஷ் மற்றும் அர்ச்சனா கடந்த வருடம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
வீட்டுக்குள் சேர்க்கவில்லை:
திரைப்படத்தில் வருவது போலவே ஒரு வருடம் கழித்து வீட்டுக்கு திரும்பினால் அவர்களை ஏற்று கொள்வார்கள் என நினைத்துள்ளனர். ஆனால் இது சினிமா இல்லையே. ஆகையால், ராகேஷ் மற்றும் அர்ச்சனா சொந்த கிராமத்திற்கு வந்த நிலையில் இருதரப்பு பெற்றோரும் காதல் ஜோடியை வீட்டுக்குள் சேர்க்கவில்லை.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி சில நாட்கள் சோகத்துடனே காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் அர்ச்சனா மற்றும் ராகேஷ் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வு அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிளிகெரே காவல் துறையினர், காதல் ஜோடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
