2 குரங்குகள் சேர்ந்து '250 நாய்கள' கொன்னது உண்மை கிடையாது...! ஒட்டுமொத்த இந்தியாவே 'ஷாக்' ஆன சம்பவத்தில் 'அதிரடி' திருப்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் இரண்டு குரங்குகள் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கொன்ற சம்பவத்தில் ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 250 நாய் குட்டிகளை இரண்டு குரங்குகள் சேர்ந்து கொன்றதாக அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து குரங்குகளின் நடவடிக்கைகளை கண்காணித்த வனத்துறையினர் அந்த இரண்டு குரங்குகளையும் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தி உள்ளூர் தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் செய்தியானது. இந்த சம்பவம் பற்றி பல செய்தி நிறுவனங்கள் விரிவான தகவல்களை பதிவு செய்தன.
குரங்குகள் பழிக்குப்பழியாக 250 நாய் குட்டிகளை கொன்றதா என்ற கோணத்தில் முதற்கட்ட ஆய்வு நடைபெற்றது. அதோடு, அப்பகுதி மக்களோ குரங்குகள் பழிக்குப்பழியாக குரங்குகள் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், வனத்துறை அதிகாரிகள் விலங்குகளுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிடுவது அவற்றின் வழக்கம் தான் என ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் ஒரு சோகமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதென்னவென்றால் சில வாரங்களுக்கு முன் இரண்டு பெரிய குரங்குகள் மற்றும் ஒரு குட்டி குரங்கு பிரிந்துவிட்டதாம்.
பிரிந்து சென்ற குட்டி குரங்கு, சில தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்துவிட்டது. குட்டி குரங்கு உயிரிழந்தது தெரியாமல்- தாய் குரங்கு நாய் குட்டியை, தனது குட்டி என நினைத்து எடுத்து சென்றது. அதனால் தான் கிட்டத்தட்ட 50-க்கும் நாய்க்குட்டிகள் உணவின்றி பட்டினியால் உயிரிழந்தது என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஆனால், 250 நாய் குட்டிகள் உயிரிழந்ததாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட எண்ணிக்கையை யார் தெரிவித்தது என்ற விவரம் மர்மமாகவே இருக்கிறது. இதுபற்றி வனத்துறை சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.