"எனக்கு ஒரு செய்தி கெடச்சுருக்கு".. கொல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு.. நண்பருக்கு ஷ்ரத்தா அனுப்பிய மெசேஜ்!!.. அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கடந்த மே மாதம் அவரது காதலரால் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆறு மாதங்கள் கழித்து சமீபத்தில் தெரிய வந்து கடும் பீதியை உண்டு பண்ணி இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஷ்ரத்தாவின் காதலர் அஃப்தாப் குறித்து பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி வந்தது.
முன்னதாக, டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார்.
அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷனன்ஷிப்பி இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடிக்கடி காதலியுடன் சண்டை போட்டு வந்ததன் பெயரில் கடும் ஆத்திரத்தில் இருந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் தெரிய வந்தது.
தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.
கடந்த மே மாதமே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை என்பதால் சந்தேகத்தில் போலீசிடம் புகாரளிக்க, அஃப்தாப் சிக்கிக் கொண்டார். இந்த வழக்கு குறித்து பல்வேறு தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளது. ஒன்றாக ஷ்ரத்தா மற்றும் அஃப்தாப் இணைந்து வாழ தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததாகவும், அஃப்தாப் ஷ்ரத்தாவை அடிக்கவும் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், ஷ்ரத்தா இறப்பதற்கு ஒரு சில மணி நேரம் முன்பு, தனது நண்பருக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மே 18 ஆம் தேதியன்று ஷ்ரத்தாவை அஃப்தாப் கொன்றதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அன்றைய தினம் கூட சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக ஷ்ரத்தா இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு கூட தனது நண்பருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் அனுப்பியதாக தகவல்கள் கூறுகின்றது.
அந்த மெசேஜில், "டியூட், எனக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. நான் மிகவும் பிஸியாகி விட்டேன்" என ஷ்ரத்தா அனுப்பி உள்ளார். இதற்கு அவரது நண்பர், மாலை சுமார் 6:30 மணியளவில், 'என்ன செய்தி?' என கேட்டு மெசேஜ் அனுப்ப, இதன் பின்னர் ஷ்ரத்தாவிடம் இருந்து பதில் வரவில்லை என்றும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் அன்றிரவு ஷ்ரத்தாவை அஃப்தாப் கொலை செய்துள்ளார்.
அதே போல, ஷ்ரத்தாவிடம் இருந்து பிறகு மெசேஜ் ஒன்றும் வராததால் அந்த நண்பர் அஃப்தாப்பிடம் ஷ்ரத்தா குறித்து மெசேஜில் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், அஃப்தாப் அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, ஷ்ரத்தாவிடம் பேச முயற்சி செய்தும் அந்த நண்பரால் முடியவில்லை.
மறுபக்கம், மே ,மாதம் ஷ்ரத்தா இறந்த பின்னரும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை அஃப்தாப் பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.