'திருப்பதி' ஏழுமலையான் கோவிலில்... பக்தர்கள் 'தரிசனம்' ரத்து... மலைப்பாதைகளும் மூடப்பட்டன!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 19, 2020 05:06 PM

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற தலங்கள் பலவும் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மலைப்பாதைகள் மூடப்பட்டு உள்ளன. முன்னதாக பக்தர்களை காத்திருக்க  வைக்காமல் அவர்களை நேரடி தரிசனம் செய்திட திருப்பதி நிர்வாகம் அனுமதித்து வந்தது.

Tirumala Tirupati Temple To Shut Down due to Coronavirus

இந்த நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தற்போது திருப்பதி மலையில் இருக்கும் பக்தர்களுக்கு மட்டும் ஏழுமலையான் தரிசனம் அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி மட்டுமல்லாமல் ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கும் நடைமுறையை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து திருமலை இடையேயான மலைப்பாதைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. நடந்து மலையேறி செல்ல பயன்படுத்தப்படும் அலிபிரி நடைபாதை, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ஆகியவையும் மூடப்பட்டு இருக்கின்றன. 

Tags : #TIRUPATI