Naane Varuven D Logo Top

சுனாமியில் காணாம போன மனைவி.. 11 வருசமா தேடும் கணவர்.. கடைசியா மனைவி அனுப்புன ஒரு மெசேஜ் தான் இதுக்கு காரணம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Oct 06, 2022 06:34 PM

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை யாராலும் இன்னும் மறந்து விட முடியாது.

japan man searching his wife for 11 years who missed in tsunami

Also Read | "பல வருசமா அந்த பங்களா அப்படியே தான் இருக்கு".. மேப் மூலம் தெரிய வந்த 'மர்மம்'!!.. ஊர் மக்கள் சொல்லும் பரபரப்பு காரணம்!

இதற்கு காரணம், அந்த பூகம்பம் மற்றும் சுனாமியின் காரணமாக மொத்தம் 20,000 பேர் வரை பலி ஆனதாகவும், 2,500 பேர் வரை மாயமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜப்பான் நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கமாக இது பார்க்கப்படும் நிலையில், இன்னும் அதன் வடு அந்நாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.

மேலும், இந்த சுனாமி மற்றும் நிலநடுக்கம் மூலம் காணாமல் போன பெண் தான் Yuko Takamatsu. இவர் Onagawa என்னும் பகுதியில் கடைசியாக காணப்பட்ட நிலையில், பேரழிவில் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாகவும் இது பதிவாகி இருந்தது.

japan man searching his wife for 11 years who missed in tsunami

Yuko காணாமல் போய் 11 ஆண்டுகள் ஆன போதும், அவரது கணவரான Yasuo Takamatsu இத்தனை நாட்களாக செய்து வரும் விஷயம், பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. தற்போது 65 வயதாகும் Yasuo, 11 வருடங்களாக காணாமல் போன தனது மனைவியை தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 2011 முதல் 2013 வரை, மனைவி யுகோவை நிலப்பரப்பில் தேடி வந்துள்ளார் Yasuo.

japan man searching his wife for 11 years who missed in tsunami

ஆனால், எங்கேயும் அவர் கிடைக்காததால், 2013 ஆம் ஆண்டு முதல் தண்ணீரில் தனது கவனத்தை திருப்பி உள்ளார். இதற்காக அவர் டைவிங் லைசன்ஸ் கொண்டு தேட ஆரம்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த 9 ஆண்டுகளாக வார இறுதியில், மனைவியின் உடலை நீரில் தேடுவதை தான் வழக்கமாக கொண்டு வருகிறார் Yasuo. தான் உயிருடன் இருக்கும் வரை, மனைவியை தேடிக் கொண்டு தான் இருப்பேன் என்றும் Yasuo குறிப்பிட்டுள்ளார்.

japan man searching his wife for 11 years who missed in tsunami

இதற்கு பின்னால், மிகவும் உருக்கமான ஒரு காரணமும் உள்ளது. மனைவி யுகோ காணாமல் போவதற்கு முன்பாக, தனது கணவருக்கு "நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?. நான் வீட்டுக்கு போக விரும்புகிறேன்" என மெசேஜ் ஒன்றை செய்துள்ளார். வீட்டிற்கு போக வேண்டும் என அவரது மனைவி விரும்பியதால், அவரது உடலை நிச்சயம் ஒரு நாள் மீட்டு வீட்டிற்கு கொண்டு வருவேன் என்ற நோக்கில் தான் இத்தனை ஆண்டுகளாக மனைவியை தேடி வருகிறார் Yasuo.

தொடர்ந்து, பேரழிவு நடந்த அடுத்த சில தினங்களில், யுகோவின் மொபைல் போன் உள்ளிட்ட உடைமைகள் கிடைத்தது. ஆனால், அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், சுனாமி காரணமாக மனைவி அனுப்பிய மெசேஜ் ஒன்று தனக்கு கிடைக்காமல் இருந்ததையும் மனைவியின் போனில் கவனித்துள்ளார் Yasuo. அந்த மெசேஜில், "சுனாமி ஒரு பேரழிவு" என்றும் யுகோ தனது கணவருக்கு மெசேஜ் அனுப்ப முயன்றுள்ளார்.

japan man searching his wife for 11 years who missed in tsunami

வங்கியில் பணிபுரிந்து வந்த யுகோ, சுனாமி வந்த சமயத்தில் அங்கே இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அலுவலக கட்டிடத்தின் கூரையிலும் யுகோ ஏறி அமர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அங்கிருந்த படி தான், தனது கணவருக்கு முதல் மெசேஜையும் அவர் அனுப்பி இருந்துள்ளார். அதுவே அவர்கள் கடைசியாக தொடர்பு கொண்ட தருணமாகவும் மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 160 வருசத்துக்கு முன்னாடி வரைஞ்ச ஓவியம்.. "பொண்ணு கையில போன் தான் இருக்குது??"... பரபரத்த நெட்டிசன்கள்!!

Tags : #JAPAN #WIFE #MISSED #TSUNAMI #SEARCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Japan man searching his wife for 11 years who missed in tsunami | World News.